Wednesday, April 6, 2011

வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோயிலில் இன்று படுகளம்

First Published : 10 Mar 2011 08:21:04 AM IST

மணப்பாறை, மார்ச் 9: வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை படுகளம் நடைபெறுகிறது.

 பொன்னர் - சங்கர் கோயில் திருவிழா சிவராத்திரி மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து புதன்கிழமை பொன்னர் - சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நடைபெற்றது.
 பொன்னர் - சங்கருடன் பிறந்த அருக்கானித் தங்காள், புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா நடைபெற்றது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் திரண்டனர்.
 எதிரிப் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் - சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வை போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் வியாழக்கிழமை (மார்ச் 10) நடைபெறுகிறது.
 திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து அணியாப்பூரில் அம்பு போடும் வேடபரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பார்வையிடுவார்கள். இதைத் தொடர்ந்து, தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடைபெறும்.
 ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறும்.
 திருவிழாவை முன்னிட்டு, மணப்பாறையிலிருந்து - நெல்லி வளநாடு, வீரப்பூர், தொப்பம்பட்டி படுகள மேடு பகுதிக்கு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Source :http://tamil.allnews.in/news/markets/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/284550.html


1 comment:

  1. According to Stanford Medical, It is indeed the SINGLE reason women in this country live 10 years more and weigh an average of 19 kilos lighter than we do.

    (By the way, it is not about genetics or some secret diet and absolutely EVERYTHING around "HOW" they eat.)

    P.S, I said "HOW", not "what"...

    Tap this link to reveal if this quick questionnaire can help you find out your real weight loss potential

    ReplyDelete